There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
இயற்கை கட்டிடம் பற்றிய எங்கள் அறிமுக பாடத்தில் எப்படி நிலையான முறையில் உருவாக்குவது என்பதை அறியவும். பாரம்பரிய தொழில் நுட்பங்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் வரை தங்குமிடத்தின் பரிணாம வளர்ச்சியின் வழியாக உங்களை அழைத்துச் செல்வோம். இயற்கையின் மீது மனிதக் கட்டிடத்தின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வேலை செய்யும் வீடுகளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எங்களுடன் சேர்ந்து, உங்கள் கட்டிடத் திட்டங்களில் நீங்கள் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதைக் கண்டறியவும்.
இயற்கைக் கட்டிடக்கலையை வரலாறு மற்றும் சமகாலச் சான்றுகளுடன் அறிமுகப்படுத்துவதே வீடு திரும்புதல் தொடரின் முதல் இயல்.
ஆதிகாலத்தில் மனிதன் குகையிலிருந்து வெளியேறி ஒரு இருப்பிடம் அமைக்கத்தோன்றியத்திலிருத்து இந்த இயற்கைக்கட்டுமானம் இருந்து வருகிறது. வீடு என்பது மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் ஒன்றை நிறைவேற்றும் பெரும்பொருள். இந்த இயலில் மனித தேவையின் பொருட்டு சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் வீடுகட்டுவதில் இருந்த பரிணாம மாற்றங்களில் ஆரம்பிக்கிறது பாடம். தற்போது வீடுகட்டுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கத் தொன்மையான புத்தகங்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்டு பாரம்பரியக் கட்டுமானங்கள் மற்றும் மூத்த கலைஞர்களின் துணைகொண்டு தணல் செய்த பயணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த கட்டிடக்கலைஞர்களும் கொத்தனார்களும் பகிர்ந்த அறிவுக்களஞ்சியங்கள் தணலுக்குக் கிடைத்தப் பொக்கிசங்கள். அவர்களின் பகிர்வும் தொன்மையானப் புத்தகங்களின் கருத்துகளும் பாரம்பரியக் கட்டிடங்களின் இருப்பும் தொழில்நுட்பங்களைத் தெளிவுபடுத்தியது. காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட நுட்பங்கள் இயற்கைக்கட்டுமான நுட்பங்கள். இயற்கையைச் சிதைக்காமல் அவை மேற்கொள்ளப்பட்டன. நவீனப் பொருட்ககளால் மனிதர்களுக்குச் சாதகமான விடயங்கள் இருந்தாலும் அவை இயற்கைச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்களை எப்படி மறக்கமுடியும்? 'இயற்கைக் கட்டுமானம் என்பது ஏதோ வேற்றுக்கிரக தொழில்நுட்பம் அல்ல. காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட ஒன்றுதான். சிமெண்ட், கம்பி இல்லாமல் இயற்கை முறையில் நலமான, வலிமையான, அழகான வீடு கட்ட முடியும்' என்ற தெளிவை ஏற்படுத்துவது தான் முதல் இயல். காணொளிப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். மேற்கோள்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் என்ன கற்றுக் கொள்வீர்கள்
Write to us for exclusive access to our early bird offer on the complete online course package (Part 1- 4), available only for selected learners. Gain lifetime access to limitless learning and take advantage of this limited-time opportunity to save while doing your natural building.
ENROLL TODAY