சுடுமண் (Surkhi)

சுண்ணாம்புடன் வினைபுரிந்து நீர்த்தடுப்பு திறனைக் கொடுக்கும் சுடுமண் பண்புகள், பயன்கள் மற்றும் பல

Details

சுடுமண் என்பது மிகப்பழமையானக் கட்டுமானப் பொருள்‌. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட பொருள். சுண்ணாம்புடன் சுடுமண் சேர்க்கும்போது இரண்டும் வினைபுரிந்து நல்ல வலிமையான பிணைப்பை உருவாக்குகிறது. கரிம மேற்றம் நிகழ்வுக்கும் இந்தச் சுடுமண் உதவுகிறது. சுடுமண்ணில் உள்ள நுண் துளைகள் நீரைத் தேக்கிக் கரிம மேற்றத்துக்கு உதவுகிறது. கரிம மேற்ற வினையின் வேகம் ஈரப்பதத்தின் அளவை நேர்விகித்தில் சார்ந்தது. பல கோவில்கள், கோட்டைகள், மாளிகைகள், பாரம்பரிய வீடுகளில் சுடுமண்ணும் சுண்ணாம்பும் கொண்ட கட்டுச்சாந்து, பூச்சுவைப் பார்க்கலாம். மற்ற மணற்துகளும் இடுபொருட்களும் கலந்திருந்தாலும் சுண்ணாம்புச் சுடுமண்ணுக்கு இடையே மட்டுமே நல்ல பிணைப்பு உருவாகிறது. நவீன முறை ஆய்விலும் பல வேடிக்கையான ஆய்வுகள் நடக்கின்றன. சிமெண்டின் ஆற்றல் நுகர்வுத் திறனைக்குறைக்க அதனுடன் சுடுமண் சேர்த்து LC 3 சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. அப்படியிருக்க நாம் ஏன் மரபு முறைகளைக் கற்றுக் கொண்டு செயற்படுத்தக் கூடாது.


Curriculum

This is a platform for sharing knowledge in natural buildings based on the traditional shelter-making methods in India. The age-old practice of using natural materials available from the surroundings in a way without causing harm to nature is revived. The addition of plant and animal derivatives made these homes durable for centuries.

Erikarai
Pandithapattu
Tiruvannamalai, Tamil Nadu, India - 606603