மூங்கில் (Bamboo)

மூங்கிலின் அடிப்படை, பதப்படுத்தும் முறைகள், கொள்முதல் செய்வது, பயன்படுத்தும் விதங்கள் ஆகியன கற்றுக்கொள்ளலாம்.

Details

நமது நாட்டில் பாரம்பரியக் கட்டுமானங்கள் கட்டுவதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பொருள் மூங்கில். இந்தியாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்ப்பட்ட மூங்கில் இனங்கள் உள்ளன. உலகத்தில் அதிகம் மூங்கில் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பெரும்பான்மையான சமூகம் மூங்கிலின் திறனை நன்கு அறிந்தவர்கள். இயற்கையாக மூங்கில் வளரும் இடங்களில், மூங்கில் வேலை திறமை வாய்ந்த கலைஞர்கள் இருக்கின்றனர்.‌ மூங்கில்களைத் தேர்ந்தெடுத்தல், அறுவடை செய்தல், பதப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனத்தில் கொள்ள வேண்டியவை இந்த வீடு திரும்புதல் தொடரில் விளக்கப்பட்டுள்ளன. உங்கள் சூழலில் வளரும் மூங்கில்கள், உள்ளூர்ப் பருவநிலை, உள்ளூர்த் கலைஞர்களின்‌ திறமைகள் ஆகியவற்றைப் பொறுத்து நாங்கள் விளக்கும் பாடங்களில் தேவையான‌ மாறுதல்களைச் செய்து பயன்படுத்துங்கள். ஏனென்றால் கூரை அல்லது அமைக்கும் நுட்பமே இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மூங்கிலைப் பயன்படுத்தும் விதமும் மாறுபடும். மூங்கில் அதிவேக வளரும் தாவரம் என்பதால் மரத்திற்குப் பதில் பயன்படுத்தலாம். நன்கு வளர்ந்த மரங்களை வெட்டுவதற்குப் பதில் மூங்கில்களை வளர்த்துப் பயன்படுத்தலாம். இந்த அதிசயப்புல்லைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பாடத்திற்குள் நுழைக.

Curriculum

This is a platform for sharing knowledge in natural buildings based on the traditional shelter-making methods in India. The age-old practice of using natural materials available from the surroundings in a way without causing harm to nature is revived. The addition of plant and animal derivatives made these homes durable for centuries.

Erikarai
Pandithapattu
Tiruvannamalai, Tamil Nadu, India - 606603