பாகம் 1-4: முழுகட்டுமானக் களஞ்சியம்

குறிப்பிட்ட கால இடைவெளியில் பாடங்கள் வெளியீடு. (பாகம் 1 மட்டும் வெளிவந்துள்ளது)

Details

வீடு திரும்புதல் - இந்திய இயற்கைக் கட்டுமானங்களுடன் உள்ளார்ந்த பயணம். இயற்கை முறையில் வீடு கட்டுவதைக் கற்றுத்தருவதுதான் இந்த ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர். அதாவது இணையவழிக் காணொளி வழிகாட்டி. மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதில் பாகம் 5 நம்மைச்சுற்றியுள்ள இயற்கைக்கட்டிடக் கலைஞர்கள் ‌எனும் தொகுப்பில் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளோம். அதில் இயற்கை வீடு கட்டியவர்களின் அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். இயற்கை வீடு கட்ட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட யாவரும் எங்களது காணொளி வழியாகக் கற்கமுடியும். சாமானியருக்கும் புரியக்கூடிய வகையில் தான் பாடங்கள் வடிவமைத்துள்ளோம்‌. அதாவது படிப்படியாக எளிமையாக விளக்கம் காணொளி வழிக்கொடுக்கப்பட்டுள்ளது‌. உள்ளூர்ப் பொருளைப் பயன்படுத்தி ஒரு மிகச்சிறிய அளவில் கட்டிடம் ஒன்று கட்டும் அளவிற்குத் தேவையான அடிப்படை இதில் கிடைக்கும். அந்த அனுபவங்களைக் கொண்டு நடைமுறை அளவில் வீடு கட்டத்துவங்கலாம். உங்கள் பகுதியில் கிட்டும் பொருட்களை ஆராய்ந்து நீங்களே கற்றுக்கொள்வது தான் இத்தொகுப்பின் நோக்கம். இதன்பின்னரும் சந்தேகம் இருந்தால் எங்களது பயிற்சிப்பட்டறையில் பங்கேற்று அல்லது தொழில் வல்லுனர்கள் ஆலோசனைப் பெற்று உங்கள் பகுதிக்கு ஏற்ப உங்களுக்கான கட்டிடம்‌ கட்டுங்கள். மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், வேலையாட்கள், கலைஞர்கள், வீடு கட்ட நினைக்கும் பயனாளிகள் போன்ற யாவரும் இதைக் கற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. எதிர்காலத்தில் பிறமொழியிலும் மொழிபெயர்க்க இருக்கிறோம்.

இயற்கைக் கட்டுமானம் தொடர்பான கூடுதல் ஆய்வுகளும் குறிப்பிட்டக் கால இடைவெளியில் வெளியிடப்படும்.

குறிப்பு: தற்போது பாகம் 1: இயற்கைக் கட்டிடக்கலையின் ஐம்பெரும் பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இனிவர இருக்கின்ற பாடங்கள்

பாகம் 2- அடித்தளம் மற்றும் சுவர் வகைகள்- தயாராகிறது

பாகம் 3- கூரை நுட்பங்கள்- அடுத்த நிலை

பாகம் 4- இயற்கைப் பூச்சுகள் மற்றும் தளம் - கடைசி நிலை

பாகம் 5- நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக் கட்டிடக்கலைக்கலைஞர்கள் - ஏற்கனவே யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளோம்.

முழுக்களஞ்சியமாக வாங்குவதால் கிடைக்கும் பலன்கள்:

ஆய்வுகள் மற்றும் புத்தகங்களின் முடிவுகள்

சுவர் வகைகள், கூரை நுட்பங்கள், பூச்சு மற்றும் தளம் அமைப்பதில் உள்ள பாடங்கள் வரும் மாதங்களில் தயாரானவுடனே அடுத்தடுத்து வெளிவரும்.

தனித்தனிக் காணொளித் தொகுப்பாக வாங்குவதற்குப் பதிலாக முழுத்தொகுப்பாக வாங்குவதால் உங்களுக்குப் பணம் மிச்சமாகும்.
இதில் உள்ள காணொளிகளைப் பார்த்துவிட்டு உங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களில் சோதனை செய்தல் அவசியம். செயல்வழிப் பயிற்சி பெறாமல் இயற்கைக் கட்டுமானம் பயில இயலாது.

முக்கியக் குறிப்பு:

செலுத்திய பணம் திருப்பிக் கொடுக்கும் வசதி இல்லை.

* கட்டணத்தில் ஜி‌எஸ்‌டி, மற்ற வரி, இன்டெர்நெட் மற்றும் பேமண்ட் கேட்வே கட்டணம் அடங்கும்
குறிப்பிட்டக் கால இடைவெளியில் பாடங்கள் வெளியிடப்படும். (தற்போது பாகம் 1 வெளியிடப்பட்டுள்ளது)


This is a platform for sharing knowledge in natural buildings based on the traditional shelter-making methods in India. The age-old practice of using natural materials available from the surroundings in a way without causing harm to nature is revived. The addition of plant and animal derivatives made these homes durable for centuries.

Erikarai
Pandithapattu
Tiruvannamalai, Tamil Nadu, India - 606603